அரசியல்உள்நாடு

விஷேட குழுவை அமைத்து மட்டக்களப்பு மாவட்ட எல்லைப் பிரச்சினைகளை தீருங்கள் – ஹிஸ்புல்லாஹ் எம்.பி கோரிக்கை

எமது நாட்டில் பல்வேறு பட்ட பிரச்சினைகள் பல ஆண்டுகளாளாக தீர்க்கப்படாமல் காணப்படுகிறது. இவைகள் நீங்கள் ஆட்சிக்கு வந்த பின் உருவான பிரச்சினைகள் அல்ல. ஒவ்வொரு பிரதேசங்களிலும் மாவட்டங்களிலும் நீண்டகாலமாக இருந்து வருகிறது என்றாலும் மக்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்து உங்களை ஆட்சிக்கு கொண்டுவந்திருக்கிறார்கள்.

எனவே இப்பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு தேவையான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென உரிய அமைச்சர், பிரதி அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் வலியுத்துகிறேன் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்ததலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (4) நடைபெற்ற 2025 வரவு – செலவுத்திட்டத்தின் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு மற்றும் தொழில் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்கான எல்லைகள் இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. பானம்பலன என்ற ஆணைக்குழு உருவாக்கப்பட்டது.

இந்த ஆணைக்குழு நாடளாவிய ரீதியில் சிபாரிசுகளை முன்வைத்திருந்தது. இந்த சிபாரிசுகளின் அடிப்படையில் நாட்டில் பல்வேறுபட்ட பகுதிகளில் பிரச்சினைகள் தீர்க்கப்பட்ட நிலையிலும் கோறளைப்பற்று மத்திய பிரதேச செயலக பிரிவின் பிரதேச சபையும் இன்னும் உருவாக்கப்படாமல், எல்லைகள் நிர்ணயிக்கப்படாமல் நிர்வாக செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆகவே பானம்பலன ஆணைக்குழுவின் சிபாரிசுகளுக்கும் அமைவாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

அதேபோன்று! மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பிரதேச செயலகங்களின் எல்லைகள் இன்றளவில் நிர்ணயிக்கப்படவில்லை. நிர்வாகம் ஒரு செயலகம், காணி ஒரு செயலகம் என்று யுத்தத்தால் ஏற்பட்ட பிரச்சினைகளால் குளறுபடிகள் தோற்றம் பெற்றுள்ளன.

பொது நிர்வாக அமைச்சு ஊடாக விஷேட குழு ஒன்றை நியமித்து மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலக பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு கேட்டுக்கொள்கிறேன். என்றார்.

Related posts

வட்டி விகிதம் மேலும் குறைப்பு

அர்ஜுன் அலோசியஸ் விடுதலை

editor

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்தனர்