உள்நாடு

விஷத்தன்மையான தேங்காய் எண்ணை தங்கொட்டுவயில்

(UTV | கொழும்பு) – விஷத்தன்மை உள்ளடங்கியதாக இனங்காணப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணை என சந்தேகிக்கும் இரண்டு பவுஸர்கள் தங்கொட்டுவ பகுதியில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

119 என்ற இலக்கத்திற்கு கிடைத்த தகவலை அடுத்து இவ்வாறு 27,500 லீற்றர் தேங்காய் எண்ணை கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பவுஸர்கள் இரண்டின் ஓட்டுனர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ராகம பகுதியில் உள்ள களஞ்சியசாலையில் இருந்து கடந்த 25 ஆம் திகதி குறித்த தேங்காய் எண்ணை கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பவுஸர்களில் உள்ள எண்ணை மாதிரிகள் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ரிஷாட் பதியுதீன் பிணையில் விடுதலை [VIDEO]

பெலியத்தையில் ஐவர் படுகொலை – தந்தையுடன் மகள் கைது!

ஒப்பந்தங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் புதிய சட்டம்