உள்நாடு

விவசாயிகளுக்கு அரசாங்கம் விடுத்த மகிழ்ச்சி தகவல்!

(UTV | கொழும்பு) –

கடந்த ஒரு வருடத்தில் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு பெரும்போகத்தில் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 17,000 ரூபா பெறுமதியான டீசலை வழங்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. உரம் கொள்வனவு செய்வதற்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் 15,000 ரூபா நிவாரணத் தொகை மற்றும் ஹெக்டேர் ஒன்றுக்கு 1 இலட்சம் ரூபா இழப்பீட்டுத் தொகைக்கு மேலதிகமாக உரிய நிவாரணம் வழங்கப்படுவதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

பயிர் சேதங்களுக்கு உள்ளான விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிவாரணம் தொடர்பில் விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்று அங்கு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி, அடுத்த இரண்டு நாட்களில் ஒவ்வொரு விவசாயிக்கும் தலா 40 லீற்றர் டீசல் வழங்கப்படவுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலங்கையர்களுக்கு மத்திய வாங்கி எச்சரிக்கை

புறக்கோட்டை- செட்டியார் தெருவில் கபொஸ் ஒழுங்கையில் அமைதியின்மை [VIDEO]

கொன்சியூலர் அலுவல்கள் பிரிவின் செயற்பாடுகள் இன்று மீண்டும் வழமைக்கு