உள்நாடு

விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்குரிய ஓய்வூதியம்

(UTV|கொழும்பு)- விவசாய மற்றும் மீன்பிடி ஓய்வூதியம் பெறுபவர்கள் ஜுன் மாதத்திற்கான ஓய்வூதியத்தை எதிர்வரும் 22ஆம் திகதி முதல் தபால் நிலையங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 20 ஆம் திகதிற்கு முன்னர் நாட்டிலுள்ள அனைத்து தபால் நிலையங்களுக்கும் குறித்த இந்த ஓய்வூதியத்திற்கான நிதியை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபையின் தலைவர் சட்டத்தரணி பிரேமசந்திர ஏபா தெரிவித்துள்ளார்.

Related posts

அத்தியாவசிய பொருட்களின் விலை : வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இரத்து

சசி வீரவன்ச பிணையில் விடுதலை

ஐ.தே.கட்சியின் தலைமை தொடர்பில் அக்கறையில்லை – சஜித்