உள்நாடுவிளையாட்டு

விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தக்கூடாத ஊக்கப் பதார்த்தங்களின் பட்டியல்

(UTV | கொழும்பு) – உலக ஊக்கமருந்து தடுப்பு முகவர் நிறுவனத்தினால் 2021ஆம் ஆண்டு பல்வேறு விளையாட்டுக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தடை செய்யப்பட்டுள்ள ஊக்கமருந்துகள் உள்ளடங்கிய ஊக்கப் பதார்த்தங்களின் பட்டியல் நாளை 21ஆம் திகதி பாராளுமன்றத்தின் அனுமதிக்காக முன்வைக்கப்படவிருப்பதாக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (19) நடைபெற்ற இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு சார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

விசேடமாக ஒவ்வொரு வருடமும் உலக ஊக்கமருந்து தடுப்பு முகவர் நிறுவனம் பல்வேறு விளையாட்டுக்களுக்காக தடை செய்யப்பட்ட ஊக்கப் பதார்த்தங்கள் அடங்கிய பட்டியலை வெளியிடுவதுடன், விளையாட்டு வீரர்கள் தெரிந்தோ அல்லது தெரியாமலோ தமது வினைத்திறனை அதிகரிப்பதற்காக இந்த ஊக்கப் பதார்த்தங்களைப் பயன்படுத்தியிருந்தால் குறித்த போட்டியில் பங்கேற்பதைத் தடுப்பதற்கு அல்லது வேறு நடவடிக்கைகளை எடுக்க முடியும்.

அதன்படி, 2021 ஜனவரி 1 முதல் இந்த ஆண்டு டிசம்பர் 31 வரை செல்லுபடியாகும் தடைசெய்யப்பட்ட ஊக்கப் பதார்த்தங்களின் பட்டியல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் கடந்த பெப்ரவரி 23ஆம் திகதி வெளியிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சில கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

சாமர கப்புகெதர ஓய்வு

யாழில் சூரிய கிரகணம்?