அரசியல்உள்நாடுவிளையாட்டு

விளையாட்டு துறை வளர்ச்சிக்கு இந்தியா ஆதரவு

விளையாட்டு துறை வளர்ச்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாகவும், கிரிக்கெட் மற்றும் பிற விளையாட்டு நடவடிக்கைகளின் வளர்ச்சிக்காக நாடு முழுவதும் உள்ள விளையாட்டு மேம்பாட்டு திட்டங்களுக்கு ஆதரவளிப்பதாகவும் இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார் கமகே ஆகியோருக்கு இடையில் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சில் இன்று (06) இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறிப்பாக இளைஞர் விவகாரத் துறையில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்த தாம் நம்புவதாகவும், அதற்காக இந்திய இளைஞர் விவகார திணைக்களத்திற்கு வருகை தருமாறு இந்நாட்டின் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

பல வகையான பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி

பிசிஆர் – ரெபிட் என்டிஜன் பரிசோதனைகள் மட்டு

போக்குவரத்துப் பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு – அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்

editor