அரசியல்உள்நாடு

விளையாட்டு அரங்கினை பார்வையிட்ட விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகைதந்த இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் ஆகியோரும் இணைந்து யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கினை இன்றையதினம் (16) பார்வையிட்டனர்.

இதன்போது துரையப்பா விளையாட்டு அரங்கின் தேவைப்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்தனர்.

குறிப்பாக ஒளியமைப்பு வசதிகள், பராமரிப்பு வசதிகள் மற்றும் உள்ளக அரங்கு அமைப்பது தொடர்பாகவும் ஆராய்ந்ததோடு இதற்கான திட்ட முன்மொழிவு பொறிமுறை ஒன்றினை உருவாக்கித் தருமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் அரச அதிபரிடம் கேட்டுக்கொண்டார்.

மேலும், வேலனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட காணி தொடர்பாகவும் அதனுடைய தற்போதைய நிலைமை தொடர்பாகவும் அமைச்சர் கலந்துரையாடினார்.

இந்நிகழ்வில் வேலனை பிரதேச செயலாளர் க.சிவகரனும் கலந்து கொண்டார்.

Related posts

2024 ஆம் ஆண்டின் சுற்றறிக்கை வெளியீடு – நிதி அமைச்சு.

வெள்ளத்தில் மூழ்கியது அக்குரனை

editor

இலங்கையில் கையடக்கத் தொலைபேசி பாவனையாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!