உள்நாடு

விளையாட்டுத் துறை அமைச்சர் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல்!

(UTV | கொழும்பு) –

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் செயற்பாடுகளை நிர்வகிப்பதற்காக நியமிக்கப்பட்ட இடைக்கால கட்டுப்பாட்டு குழுவின் செயற்பாடுகளை இடைநிறுத்தி பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவுகளை நீக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தனது சட்டத்தரணிகள் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆட்சேபனைகளை தாக்கல் செய்துள்ளார். சட்டத்தரணி ஜீ.ஜி.அருள்பிரகாசம் ஊடாக விளையாட்டுத்துறை அமைச்சர் இந்த ஆட்சேபனைகளை தாக்கல் செய்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் சயை தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், அர்ஜுன ரணதுங்கவின் தலைமையில் நியமிக்கப்பட்ட இடைக்கால கிரிக்கெட் கட்டுப்பாட்டுக் குழுவின் செயற்பாடுகளையும் அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலையும் இடைநிறுத்தி இடைக்கால தடை உத்தரவு ஒன்றை வௌியிட்டது. குறித்த இடைக்கால தடை உத்தரவை நீக்குமாறு கோரியே விளையாட்டுத்துறை அமைச்சர் இந்த சீராக்கல் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

10000 ரூபாய் பணம் வழங்கப்படுவதாக பரவும் தகவல் பொய் – இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

editor

கொரோனா தொற்றுக்கு இன்றும் 1,180 பேர் அடையாளம்

தொடர்ந்தும் மழையுடனான காலநிலை