உள்நாடு

விளையாட்டுத்துறை அமைச்சரால் வெளியிடப்பட்ட மேலும் ஒரு வர்த்தமானி!

(UTV | கொழும்பு) –

இரண்டு விளையாட்டு சங்கங்கள் மற்றும் 03 விளையாட்டு சம்மேளனங்களின் பதிவுகளை தற்காலிகமாக இடைநிறுத்தி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

1973 ஆம் ஆண்டு 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டம் திருத்தம் மற்றும் 32 ஆவது சரத்தின் கீழ் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவிற்கு வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு அமைய இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இடைநிறுத்தப்பட்ட விளையாட்டு சங்கங்கள் மற்றும் சம்மேளனங்கள் பின்வருமாறு

*இலங்கை வில்வித்தை சங்கம்
*இலங்கை கபடி சம்மேளனம்
*இலங்கை மல்யுத்த சம்மேளனம்
*இலங்கை ப்ரிஜ் சம்மேளனம்
*இலங்கை தேசிய சக்கர காலணி சங்கம்

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மதுபான சாலைகளுக்கும் பூட்டு

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

வௌ்ளை வேன் சம்பவம்; ராஜிதவிடம் வாக்கு மூலம்