உள்நாடு

விளையாட்டுத்துறை அமைச்சரின் வன்னி மாவட்ட ஒருங்கிணைப்பாளராக பாலிந்த

(UTV | கொழும்பு) –  விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவின் வன்னி மாவட்ட ஒருங்கிணைப்புச் செயலாளராக பாலிந்த விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

பாலிந்த விக்ரமசிங்க சிறந்த நிர்வாகத் திறமை கொண்டவர் என்பதுடன் சிறந்த விளையாட்டு வீரர் என்பதனால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜக்ச தெரிவித்துள்ளார்.

பாலிந்த, கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவர் ஆவார்.

கல்வி பயின்று கொண்டிருந்த போது ரக்பி மற்றும் காற்பந்து விளையாட்டுகளுக்காக பல விருதுகளைப் பெற்றுள்ளதோடு 100m, 110m, தடைதாண்டல் மற்றும் நீளம் பாய்தல் போன்ற தடகள போட்டிகளிலும் சிறந்து விளங்கினார். அத்துடன் அவர் பாடசாலை சிரேஷ்ட மாணவ முதல்வராகவும் திகழ்ந்துள்ளார்.

இவருக்கான நியமனத்தை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அண்மையில் வழங்கிவைத்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நிதி அமைச்சராக பசில் ராஜபக்ஷ

‘Pandora Papers’ : உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளவும்

பாத்திமா முனவ்வராவுடைய ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது