உள்நாடு

விளையாட்டை ஊக்கப்படுத்தினால் சிறுவர்களின் தகாத செயற்பாடுகளை தவிர்க்க முடியும்- இல்ஹாம் மரிக்கார்

(UTV | கொழும்பு) –

கொழும்பு விஸ்டம் முன்பள்ளி விளையாட்டுப் போட்டிகள் கடந்த (09.08.2023) அன்று விமர்சையாக நடைப்பெற்றது .
இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக அமேசான் கல்லூரியின் முகாமையாளரும் பேராதனை பல்கலைக்கழக உளவியல் துறை விரிவுரையாளருமான (visiting lecturer) இல்ஹாம் மரிக்கார் கலந்து சிறப்பித்தார்.
மேலும் சிறப்பு விருந்தினர்களாக குழந்தைகள் உரிமை மேம்பாட்டு அதிகாரி திருமதி. துஷாரா விக்கிரமசிங்க மற்றும் மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைகுழுவின் மதிப்பீட்டாளர் பிம்பா ஜீவரத்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிறுவர்களை விளையாட்டுப் பயிற்சிகளில் ஊக்குவிப்பதன் மூலம் போதைப்பொருள் பாவனை மற்றும் தகாத செயல்பாடுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இல்ஹாம் மரிக்கார் கருத்து தெரிவித்தார். மேலும் போட்டிகளில் வெற்றி பெற்ற முன்பள்ளி சிறார்களுக்கான பரிசில்களும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

“அரசாங்கத்தால் ஜனநாயகத்திற்கு மரண அடி” – சஜித்

பொலிஸ் மா அதிபரின் பிரச்சினை உடனடி தீர்வு காணுமாறு ஜனாதிபதிக்கு கடிதம்!

அரசாங்க இலத்திரனியல் ஊடகங்கள் ஒரே நிர்வாகத்தின் கீழ்!

editor