சூடான செய்திகள் 1

விளம்பி வருட சுபநேரங்கள்

(UTV|COLOMBO)-சித்திரைப்புத்தாண்டு விளம்பி புதுவருடமானது 14ஆம் திகதி காலை7மணிக்கு உதயமாகின்றது.

தமிழர்களின் 60வருட சுற்றுவட்டத்தில் 32ஆவது வருடமான இவ் வருடம் 14.04.2018 (சித்திரை 01) சனிக்கிழமை காலை 7.00 மணிக்கு புதிய ‘விளம்பி’ என்னும் பெயருடைய தமிழ்ப்புத்தாண்டு பிறக்கின்றது.

 

‘விளம்பி’ வருஷத்தில் யாவற்றையும் சீர் தூக்கி கண்ட நற்பலன் மூன்றும் தீயபலன் இரண்டு பங்கு என்று பஞ்சாங்கம் கூறுகின்றது.

 

14.04.2018 சனிக்கிழமை அதிகாலை 3.00 மணி முதல் சனிக்கிழமை 11.00 (மு.ப) மணி வரை விஷு புண்ணிய காலமாகும். இப்புண்ணிய காலத்திற்குள் அனைவரும் சிரசில் கொன்றையிலையும் காலில் ஆலிலையும் வைத்து மருத்து நீர் தேய்த்து ஸ்நானம் செய்தல்.

மருத்து நீரை கிழக்கு அல்லது வடக்கு முகமாக நின்று பெற்றோர் அல்லது குரு பெரியோர்களைக் கொண்டு தேய்ப்பித்தல் சிறப்பானது.

 

விளம்பி வருடத்திற்கான ஆடையாக சிவப்பு நிறமுள்ள பட்டாடை அல்லது சிவப்பு கறுப்பு கரையமைந்த பட்டாடையாகும். ஆபரணமாக பவளம் நீலக்கல் இழைத்த ஆபரணம் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

சங்கிரம தோஷ நட்சத்திரங்களாக பூசம்- மகம்- பூரம்- உத்தரம் 1ம் கால் அனுஷம்- பூரட்டாதி 4ம் கால்- உத்தரட்டாதி- ரேவதி . இவற்றிற் பிறந்தோர் தவறாது மருத்து நீர் தேய்த்துஸ்நானம் செய்து இயன்ற தான தருமங்களைச் செய்து சங்கிரமதோஷத்தை நிவர்த்தி செய்யவேண்டும்.

 

சித்திரை மாதம் 1ம் திகதி சனிக்கிழமை (14.04.2018) காலை சூரியனுக்குப் பொங்கல் பூசைகள் செய்து வழிபாடுகள் செய்தல் பொருத்தமாகும்.

 

(சித்திரை -01) 14.04.2018 சனி பகல் மணி 12.15 முதல் பி.ப மணி 2.10 வரை(சித்திரை -01) 14.04.2018 சனி மாலை மணி 6.21 முதல் இரவு மணி 8.13 வரை(சித்திரை -03) 16.04.2018 திங்கள் பகல் மணி 12.30 முதல் பிற்பகல் மணி 2.02 வரை(சித்திரை -03) 16.04.2018 திங்கள் மாலை மணி 06.13 முதல் இரவு மணி 7.24 வரை கைவிசேஷத்திற்குப்பொருத்தமான நேரங்களாகும்.

புண்ணியகாலத்தில் குலதெய்வ வழிபாடு செய்து ஆலயங்களில் நடைபெறும் விசேட பூசை வழிபாடுகளில் கலந்துகொள்ளல் சாலச்சிறந்ததாகும்.

பெற்றோர் குரு பெரியவர்களை வணங்கி ஆசிபெறல் வேண்டும். உற்றார் உறவினர் நண்பர்களுடன் அளவளாவி வாழ்த்துக்கள் தெரிவித்து போஜனம் மேற்கொண்டு தாம்பூலம் அருந்தி மகிழ்தல். புதிய வருஷ பலாபலன்களை வாசித்தும்- கேட்டும் நன்குணர்ந்து புதிய வருஷத்தில் ஆற்றக் கூடிய நற்கருமங்களைச் சிந்தித்தும் அரிய தவத்தாற் பெற்ற மானிடப்பிறவியில் செயற்பாலனவற்றை இனிது நிறைவேற்றி மங்கள கரமாக வாழ்வோமாக.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் 26 பேருக்கு பதவி உயர்வு

அரசியல் கட்சிகளது செயலாளர்கள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் இடையே சந்திப்பு

சர்வதேச தாதியர் தின விழா ஜனாதிபதி தலைமையில்