கேளிக்கை

வில்லனாகும் சிம்பு…

‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்துக்குப் பிறகு, சிம்பு தற்போது, ஹன்சிகா நடித்துவரும் ‘மஹா’ படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடிக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு ஜூலை 23ம் திகதி தொடங்க இருக்கிறது. இந்நிலையில், ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.
கன்னடத்தில் உருவான ‘மப்டி’ படத்தின் இயக்குனர் நர்த்தன் என்பவர் இப்படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் சிம்பு கேங்ஸ்டராக வில்லன் வேடத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது கர்நாடகாவில் நடந்து வருகிறது. இப்படத்தில் மேலும் நடிக்க இருக்கும் நடிகர்கள், நடிகைகள் பட்டியல் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாக இருக்கிறது.

Related posts

பிரபல பாலிவுட் நடிகர் படத்தில் நித்யா

‘Tom and Jerry’ இயக்குனர் காலமானார்

‘ஜாக்சன் குணமடைய எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்’