அரசியல்உள்நாடு

விலை குறைப்பு தொடர்பில் மகிழ்ச்சியான தகவலை வெளியிட்ட அமைச்சர் வசந்த சமரசிங்க

எதிர்காலத்தில் சில பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் இன்று (16) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

“கோழி மட்டுமல்ல, தண்ணீர் போத்திலில் இருந்து.

100 ரூபாய்க்கு விற்கப்படும் தண்ணீர் போத்தலை 40 ரூபாய்க்கும் குறைவாக விற்க முடியும்.

ஒரு பெக்கெட் உப்பு 52 ரூபாய்க்கு வாங்கப்பட்டு 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தற்போது உப்பு தொழிலில் உப்பு இல்லை என்ற பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

தண்ணீர் போத்தலில் இருந்து நம் நாட்டில் ஒரு பிரச்சனை உள்ளது.

சந்தையில் நுகர்வோர் அதிக சுமையை சுமக்க வேண்டியுள்ளது. எனவே, அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் வகையில் பல பொருட்களின் விலையை நிர்ணயிக்க தேவையான நடவடிக்கைகளை நுகர்வோர் அதிகாரசபை ஊடாக நுகர்வோர் சபை தற்போது முன்னெடுத்து வருகின்றது.

அவை எதிர்காலத்தில் தெரியவரும்” என்றார்.

Related posts

“சேனாதிபதி 200 பேரை மிரிஹான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்தினார்”

SLFP கோரிக்கையும்; விமல், கம்மன்பில, வாசுவின் தீர்மானமும்

மழையுடனான வானிலை மேலும் தொடரும்