சூடான செய்திகள் 1

விலைமதிப்பற்ற கஜமுத்துக்களுடன் நால்வர் கைது

(UTV|COLOMBO)-கண்டி மஹாமாயா பெண்கள் கல்லூரியின் ஆரம்பப் பாடசாலைக்கு அருகிலும் பல்லேகெலே பிரதேசத்தில் பல்லேகல தேசிய கிரிக்கட் விளையாட்டரங்கிற்கும் அருகிலிருந்து, ​ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் மூலம் விலைமதிப்பற்ற கஜமுத்துக்கள் பதினொன்றுடன் நான்கு சந்தேகநபர்கள் நேற்று (09) கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் பதுளை, மொனராகலை, அம்பாறை மற்றும் வெல்லவாய பிரதேசத்தைச் சேர்ந்த 27,28,35 மற்றும் 40 வயதுடையவர்களென்றும் பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த சந்தேகநபர்கள் நால்வரையும் இன்று (10) கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 

 

 

 

Related posts

கோட்டாபய ராஜபக்ஷாவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

தேசிய கணக்காய்வு அறிக்கை தொடர்பான இரண்டாம் கட்ட விவாதம் பாராளுமன்றில் இன்று

இலங்கை-சீஷெல்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து