கிசு கிசு

விலங்குகளையும் விட்டு வைக்காத ‘கொரோனா’

(UTV|ஹாங்காங் ) – உயிர் அச்சுறுத்தல் மிக்க கொவிட் – 19 எனும் கொரோனா வைரஸ் தொற்று மனிதர்களுக்கு மட்டுமே பரவி வந்த நிலையில், தற்போது நாய்க்கும் பரவி விட்டதால் இனி உலகம் முழுவதும் இந்த வைரஸை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம் என மருத்துவர்கள் கூறி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக உலகெங்கிலும் உள்ள அனைத்து நாடுகளும் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் தற்போது மனிதர்களுக்கு மட்டுமன்றி ஹாங்காங் நகரத்தில் உள்ள ஒரு நாய்க்கும் பரவி உள்ளதாக சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாயிடமிருந்து மிக வேகமாக மற்ற விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இந்த கொரோனா வைரஸ் பரவ அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கப்பட்ட நாயை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் அந்நாயின் இரத்தப் பரிசோதனை ஆய்வு செய்து வருவதாகவும் முழு அளவில் குணம் அடைந்தால் மட்டுமே அந்த நாய் உரிமையாளருடன் ஒப்படைக்கப்படும் என்றும் ஹாங்காங் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

விலையுயர்ந்த ஆடம்பர பரிசு கொடுத்த அந்த பிரபல நடிகர்?

நாட்டை விட்டு வெளியேற அவசியம் இல்லை

விஸ்வாசம் ஸ்டைலில் ஹர்பஜன் அசத்தல் ட்வீட்!