வகைப்படுத்தப்படாத

விரைவில் பணிக்கு திரும்புவேன்…

(UTV|INDIA) மருத்துவப் பரிசோதனைகள் நிறைவடைந்ததும் தாம் விரைவில் பணிக்கு திரும்புவதாக, பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட, இந்திய விமானி அபிநந்தன் தெரிவித்துள்ளார்.

அவர் இந்தியாவிடம் பொறுப்பளிக்கப்பட்ட பின்னர் கடந்த 2 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்திய – பாகிஸ்தானுக்கு இடையில் இடம்பெற்று வரும் மோதல் சம்பவங்களுக்கு அமைய, இந்திய விமானம் ஒன்றை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியமையை அடுத்து அதில் இருந்த விமானி அபிநந்தன் பாகிஸ்தானினால் சிறைப்பிடிக்கப்பட்டார்.

பின்னர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைய, அவர் வாகா எல்லையில் வைத்து இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதுடன், அவரது உடலில் உலவுப்பார்க்கும் சிப் ரக கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாக என்பது குறித்தும் விசேடமாக பரிசோதிக்கப்பட்டது.

அத்துடன், அவரை இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமனும் நேரில் சென்று பார்வையிட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

சிறிகொத்த கட்சிக் காரியாலயத்திற்கு எதிராக உள்ள பாதை முடக்கம்

இலங்கை தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் ஊடக அறிக்கை

Don Cheadle joins “Space Jam 2” cast