கேளிக்கை

விருது விழாவுக்கு மாத்திரம் கலந்து கொள்ளும் பிரபல நடிகை

(UTV|INDIA) – தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியான நயன்தாரா பட விழாக்கள் எதிலும் கலந்துகொள்ளாமல் விருது விழாவில் மட்டும் பங்கேற்பதை விமர்சித்து வருகின்றனர்.

இவர் கடந்த வருடம் வெளியான சிரஞ்சீவியுடன் ‘சைரா நரசிம்மா ரெட்டி’, விஜய்யுடன் ‘பிகில்’, அஜித்துடன் ‘விஸ்வாசம்‘, தனி கதாநாயகியாக ‘ஐரா’, சிவகார்த்திகேயனுடன் ‘மிஸ்டர்.லோக்கல்’ ஆகிய படங்களில் நடித்தார்.

ஆனால் எந்த படத்தின் நிகழ்ச்சியிலும் நயன்தாரா கலந்து கொள்ளவில்லை.

சீரஞ்சிவி நடித்த ‘சைரா நரசிம்மா ரெட்டி’ படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது பெரும் சர்ச்சையாக மாறியது. கோடிகளில் சம்பளம் வாங்குபவர் விளம்பர நிகழ்ச்சிகளில் எப்படி கலந்து கொள்ளாமல் இருக்கலாம் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

ஆனால் நயன்தாரா விருது நிகழ்ச்சிகள் என்று வரும்போது, அதை மறுக்காமல் வாங்குவதற்கு கலந்து கொள்கிறார். இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சம்பளம் வாங்கிக் கொண்டு நடிக்கும் படங்களின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாதவர், எப்படி விருது நிகழ்ச்சியில் மட்டும் கலந்து கொள்ளலாம் என்ற விமர்சனம் எழுந்துள்ளது

இந்த ஆண்டு அவர் நடிக்கும் ‘நெற்றிக்கண்’ படத்தின் விழாவில் கலந்து கொள்வார் என்று திரையுலகினர் கருதுகிறார்கள். ஏனென்றால், மிலந்த் ராவ் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அவருடைய காதலர் விக்னேஷ் சிவன் என்பது தான் இதற்கு காரணம்.

Related posts

இயக்குனர் தர்மசேன பத்திராஜவுக்கு பாராட்டு விழா

உலகின் நகைச்சுவை ஜாம்பவான் பில் கொஸ்பேவிற்கு சிறைத்தண்டனை

திரையுலகில் அதிர்ச்சி : விவேக் உயிரிழப்பு