விளையாட்டு

விராட் கோலியின் அதிரடி முடிவு…

(UTV|INDIA) எதிர்வரும் உலக கிண்ண கிரிக்கட் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் விளையாடுவது குறித்து இந்திய மத்திய அரசாங்கம் மேற்கொள்ளும் முடிவுகளுக்கு அமையவே செயற்படபோவதாக, இந்திய கிரிக்கட் அணியின் தலைவர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
இந்திய பாதுகாப்பு படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல், இந்திய அணிக்கு பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
சில மாதங்களில் உலக கிண்ணம் இடம்பெறவுள்ளது.
அதன்போது இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள வேண்டி வரும்.
இது குறித்து இந்திய கிரிக்கட் சபையும், இந்திய அரசாங்கமும் இணைந்து எடுக்கும் தீர்மானத்திற்கு அமையவே தமது அணி செயற்படும்.

இதுவே தமது நிலைபாடு எனவும் விராட் கோலி குறிப்பிட்டுள்ளார்.

Related posts

2018 அவுஸ்ரேலியாவில் பொதுநலவாய விளையாட்டு போட்டி

இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி

உலக கோப்பை கால்பந்து போட்டி இன்று தொடக்கம்