கேளிக்கை

விரல் துப்பாக்கியால் நடிகரை சுட்ட பிரியாவாரியர்

(UTV|INDIA) ஒரு அடார் லவ் பட டீஸரில் காதலனை கண்ணடித்து நமட்டு சிரிப்பு சிரித்து காதல் வலை வீசி நடித்த பிரியாவாரியர் ஒரே நாளில் உலகம் முழுவதும் பிரபலமானார். சர்ச்சையில் சிக்கிய இப்படம் தமிழில் வரும் 14ம் தேதி காதலர் தினத்தன்று வெளியிடுகிறார் கலைப்புலி எஸ்.தாணு. இதுதொடர்பான பட விழா ஒன்றில் பிரியாவாரியர் கலந்துகொண்டார். சிறப்பு அழைப்பாளராக அல்லு அர்ஜூன் பங்கேற்றார். நிகழ்ச்சி நடந்துக் கொண்டிருந்தபோது கண்ணடித்து காதல் செய்து காட்டுங்கள் என்றார்.

அதற்கு அவர், ‘கண்ணடித்து கண்ணடித்து களைத்துப்போய் விட்டேன் வேண்டுமானால் விரல் துப்பாக்கியில் காதல் சொல்கிறேன்’ என்று இரண்டு கைகளையும் ஒன்றாக வைத்து அதில் இரண்டு விரல்களை துப்பாக்கி முனைபோல் நீட்டி அதன்மீது முத்தமிட்டு அல்லு அர்ஜுனை நோக்கி சுட்டார். அதைக்கண்டு அல்லு அர்ஜுன் காதல் மயக்கம் அடைந்தவர்போல் நடித்தார். இதேகாட்சி படத்திலும் இடம்பெறுகிறது. பிரியாவாரியர் தன்னுடன் நடித்த ரோஷனை நோக்கி விரல் துப்பாக்கிக்கு முத்தமிட்டு சுடும் காட்சியில் அந்த நடிகரும் காதல் மயக்கம் அடைந்தது போல் அக்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

 

 

 

 

Related posts

கமலுடன் இணையும் ஷகீலா?

கொரோனாவிலிருந்து குணமடைந்தார் ஐஸ்வர்யா ராய்

‘வலிமை’ ஃபர்ஸ்ட்லுக் மோஷசன் போஸ்டர் வெளியானது