உள்நாடு

வியாழன்று மீண்டும் மத்திய வங்கி ஆளுநராக கப்ரால்

(UTV | கொழும்பு) –   அஜித் நிவாட் கப்ரால் மத்திய வங்கியின் ஆளுநராக எதிர்வரும் 16ஆம் திகதி வியாழக்கிழமை கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாளை மறுதினம் மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் டபிள்யூ.டி.லக்ஸ்மன் ஓய்வு பெறவுள்ளார்.

இதேவேளை, இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை ஏற்பதற்கு முன்னர் நேற்றைய தினம் மிஹிந்தலை ரஜமஹாவிகாரையின் விகாராதிபதி தம்மாரத்ன தேரரை சந்தித்து ஆசி பெற்றார்.

இதேவேளை, அஜித் நிவாட் கப்ராலின் வெற்றிடத்திற்கான புதிய நாடாளுமன்ற உறுப்பினரின் பதவியேற்பு எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பமாகும் நாடாளுமன்ற வாரத்தில் இடம்பெறவுள்ளது.

ஜயந்த கெட்டேகொட அந்த வெற்றிடத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக பல பெயர்கள் தொடர்பில் யோசனை முன்வைக்கப்பட்ட போதிலும் இறுதியாக ஜயந்த கெட்டேகொடவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இது தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு பொதுஜன பெரமுனவினால் அடுத்த வாரம் வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

எட்டு உயிர்களை காவுவாங்கிய பாதை – அரச அதிகாரிகள் இன்னும் கண்டுக்கொள்ளவில்லை – பாராளுமன்றத்தில் அஷ்ரப் தாஹிர்

editor

ஆயுர்வேத தேசிய வைத்தியசாலையின் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்வதற்காக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விஜயம்

editor

ஜனாதிபதி பதவியையும், 2/3 பெரும்பான்மை அரசாங்கத்தையும் வைத்துக் கொண்டு அரசாங்கம் மக்களுக்கு என்ன பணிகளை செய்துள்ளன ? சஜித் பிரேமதாச

editor