உலகம்

வியன்னாவில் 6 இடங்களில் தாக்குதல் – மூவர் பலி

(UTV | ஆஸ்திரியா ) –  ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் 6 வெவ்வேறு இடங்களில் நடந்த தாக்குதலில் மூவர் உயிரிழந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன,

அந்த நகரில் பெரும்பாலான பகுதிகள் பொலிஸாரினால் சீல் வைக்கப்பட்டு ஏனையோரை தேடும் நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த தாக்குதலில் இதுவரை 15 பேர் காயம் அடைந்ததாகவும் அதில் ஏழு பேர் கவலைக்கிடமாக உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என அந்நாட்டின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மூடப்படுகிறது கூகுள் நிறுவனம்

Google செயலிழந்தது

ஜனாதிபதி தேர்தலில் நூலிழையில் வென்ற மக்கள் சக்தி கட்சி