உலகம்

வியட்நாமின் பிரபல சுற்றுலாத் தளமும் முடக்கம்

(UTV | வியட்நாம்) – வியட்நாமின் பிரபல சுற்றுலாத் தளமான டா நங் (Da Nang) பகுதியில் புதிதாக கொவிட் – 19 தொற்றுக்குள்ளான 15 பேர் இனங்காணப்பட்டுள்ளதை தொடர்ந்து இந்த முடக்க செயற்பாடுகள் அமுல் படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை அடுத்து குறித்த பகுதியில் உள்ள சுற்றுலா பயணிகளை வெளியேற்றுவதற்கு தீர்மானித்துள்ளதாக வியட்நாம் அரசாங்கம் தெரிவித்துள்ளது

கொவிட் – 19 தொற்று காரணமாக இதுவரை வியட்நாமில் 446 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 369 பேர் பூரணமாக குனமடைந்துள்ளனர். இதுவரையான காலப்பகுதியில் எந்த வித உயிரிழப்புகளும் பதிவாகவில்லை

இருப்பினும் கடந்த 3 மாதங்களுக்கு பின்னர் வியட்நாமின் டா நங் (Da Nang) பகுதியில் கொவிட் – 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

இதனைத் தொடர்ந்து கொவிட் – 19 தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், டா நங் (Da Nang) நகரத்திற்கான பொதுப் போக்குவரத்து சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் வியட்நாம் அரசாங்கம் தெரிவித்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

Related posts

‘உக்ரைனில் இருந்து ரஷியா வரும் மக்களுக்கு நிதியுதவி’

INDIA ELECTION 2024 : வெல்லப்போவது யார்? இந்தியா கட்சிகள் பெற்ற இடங்களின் விபரம்

பைடனின் பதவியேற்புடன் பழிவாங்கல் தொடரும்