உள்நாடு

விமான விபத்து தொடர்பான அறிக்கை நீதிமன்றில்

(UTV|பதுளை )-ஹப்புத்தளை – பகுதியில் இடம்பெற்ற இலகுரக விமானம் விபத்து தொடர்பான காலநிலை அவதான நிலையத்தின் அறிக்கை பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த விமான விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் சிறந்த காலநிலை நிலவியதாகவும் காற்றின் வேகமும் வழமையான அளவில் இருந்தாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தை கண்டறியும் வகையில், வான்படை தளபதியின் பணிப்புரைக்கு அமைய விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கான ஸ்டிக்கர் ஒட்டும் பணி

கஞ்சிபானை இம்ரான் சிறைவைக்கப்பட்டிருந்த சிறையில் தொலைபேசிகள்

சர்வஜன அதிகாரத்தின் தேசிய பட்டியல் வௌியானது

editor