வகைப்படுத்தப்படாத

விமான மற்றும் புகையிரத நிலையங்களில் வெடிபொருட்கள்

(UTV|LONDON) பிரித்தானியாவின் இரு விமான நிலையங்கள் மற்றும் மிகப்பெரிய புகையிரத நிலையத்துக்கு வெடிபொருட்கள் அடங்கிய பொதிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக, பிரித்தானியாவின் தீவிரவாத ஒழிப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவற்றில் ஒன்று ஹீத்ரோ (Heathrow) விமான நிலையத்தின் அலுவலக கட்டடத்தில் வெடித்ததில் சிறிதளவு தீ பரவியுள்ளது.

எனினும், இதனால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.

ஹீத்ரோ விமான நிலையத்தில் தீடீரென தீப்பற்றிய பொருளொன்றை ஊழியர் ஒருவர் அணைக்க முற்படுகையில் வெடிபொருட்கள் காணப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அதேபோன்றதொரு பொதி லண்டனின் சன நெரிசல் மிக்க வோட்டர்லூ புகையிரத  நிலையத்தில் தபால் அறையிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அதேபோன்றதொரு பொதி கிழக்கு லண்டனின் சிட்டி விமான நிலையத்தின் அலுவலக அறையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, பிரித்தானியாவில் இரண்டாவது உயர்மட்ட தீவிரவாத எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

கவுதமாலா எரிமலை வெடிப்பு எதிரொலி

நாளை முதல் விமான சேவை ஆரம்பம்

Malinga seals Sri Lanka win in his Final ODI