கேளிக்கை

விமான பைலட் ஆகும் நடிகை ஸ்ரீதேவி மகள்

(UTV|INDIA)-நடிகர், நடிகைகளின் வாழ்க்கை சரித்திரம் ஒருபக்கம் உருவாகும் அதேசமயம் விளையாட்டு துறையை சேர்ந்த டோனி, சச்சின், சாய்னா, மேரிகோம் போன்றவர்களின் வாழ்க்கை படங்களும் உருவாகின்றன. அடுத்து முதல் பெண்மணியாக விமான பைலட் ஆகி கார்கில் போரில் பங்கெடுத்த குன்ஜான் சக்சேனா வாழ்க்கை சரித்திரம் பல்வேறு மொழிகளில் படமாக உள்ளது. குன்ஜான் வேடத்தில் நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிக்கிறார். இதையடுத்து சமீபத்தில் குன்ஜானை நேரில் சந்தித்த அவர் கார்கில் போரில் அவர் ஆற்றிய சேவைக்கு பாராட்டு தெரிவித்ததுடன் அவருடைய அனுபவம்பற்றியும் கேட்டறிந்தார்.

1999ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையே நடந்த கார்கில் போரில் காயம் அடைந்த வீரர்களை போர் நடக்கும் பகுதிகளுக்கும், அங்குள்ள முகாம்களுக்கும் விமானத்தில் சென்று அவர்களை மீட்டு வரும் பணியில் குன்ஜான் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடன் ஸ்ரீவித்யா ராஜன் என்ற பைலட்டும் இணைந்து பணியாற்றினார். தடக் இந்தி படம் மூலம் நடிகையாக அறிமுகமான ஜான்வி கபூர் அடுத்து விமான வீராங்கனையாக வேடமேற்றிருப்பதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

கமல்ஹாசனுக்கு வில்லனா விஜய்?

சோனாக்ஷி இனது ‘I Love You’

காதலனுடன் திருமணம் எப்போதென்று கூறிய ஸ்ருதி