உள்நாடு

விமான பயணிகளாக பயணித்து தங்க ஆபரணங்களை கடத்தி செல்லும் கும்பல்

(UTV | கொழும்பு) –     நாட்டில் விமான பயணிகளாக பயணித்து தங்க ஆபரணங்களை கடத்தி செல்லும் கும்பல்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு எதிர்வரும் வாரத்தில் வெளியிடப்படும் என்று நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய தெரிவித்தார்.
அதன்படி தங்க ஆபரணங்களின் தரம் மற்றும் அளவு பற்றி ஆராய்வதற்கு விசேட தொழில்நுட்ப முறையினை அமுல்படுத்துவது குறித்து சுங்கப் பிரிவினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருக்கிறது

ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாளர் நாயகத்தின் அனுமதியின்றி தங்க ஆபரணங்களை அணிந்து கொண்டு விமான பயணிகளாக வருகை தருபவர்களை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதே இதன் நோக்கமாகும்.

Related posts

வீடு திரும்பிக் கொண்டிருந்த தாயும் மகனும் ரயிலில் மோதி படுகாயம்

editor

மீன், இறைச்சி, முட்டை ஆகியவற்றின் விலைகளும் உயர்வு

இலங்கையின் அரசியல் வரலாற்றில் பாரிய மாற்றம்