வகைப்படுத்தப்படாத

விமானப்படை வீரர்களின் வருடாந்த இஸ்லாமிய சமய அனுஷ்டான நிகழ்வு

(UDHAYAM, COLOMBO) – விமானப்படை வீரர்களின் வருடாந்த இஸ்லாமிய சமய அனுஷ்டான நிகழ்வு சிறப்பான முழறியல் நடைபெற்றுள்ளது.

விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி  தலைமையில் கொல்லுபிட்டி ஜும்மா பள்ளிவாசலில் நேற்று இந்த சமய அனுஷ்டான நிகழ்வு இடம்பெற்றது.

மனிதாபிமான நடவடிக்கையின் போது உயிரிழந்த மற்றும் அங்கவீனமுற்ற படைவீரர்களுக்காக துஆ பிராத்தனை மேற்கொள்ளப்பட்டது.

அரச தலைவர்கள், முப்படைகளின் தளபதிகள், தற்போது சேவையில் ஈடுபட்டுள்ள விமானப்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உட்பட அனைத்து விமானப்படை வீரர்களுக்கும் பிராத்தனை இடம்பெற்றது.

இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி , விமானப்படை தலமைத் தளபதி எயார் வைஸ் மார்ஷல் டீ.எல்.எஸ். டயஸ் மற்றும் விமானப்படை அதிகாரிகள் மற்றும் விமானப்படை வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

பிரெக்ஸிட் தீர்மானம் மூன்றாவது முறையாக தோல்வி…

UNP Presidential candidate will be revealed in 2-weeks

212 Drunk drivers arrested within 24-hours