சூடான செய்திகள் 1

விமானப்படையின் பணிகளுக்கு ஜனாதிபதி பாராட்டு

(UTV|COLOMBO) 68 வருட காலமாக தாய் நாட்டின் இறைமையையும் பௌதீக ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதற்காக இலங்கை விமானப்படை மேற்கொண்டுவரும் பணிகள் பாராட்டத்தக்கதாகுமென ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

நேற்று (02) முற்பகல் ஹிங்குரக்கொட விமானப் படை முகாமில் கோலாகலமாக இடம்பெற்ற இலங்கை விமானப் படையின் 68வது ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இவ்வருடம் விசேட கண்காட்சி மற்றும் சாகச நிகழ்வுடன் இடம்பெறும் இந்த ஆண்டு நிறைவு விழாவில் விமானப் படையின் இல.07 ஹெலிகொப்டர் பிரிவு மற்றும் இலக்கம் 08 மென் போக்குவரத்து பிரிவு என்பன தேசத்திற்கு மேற்கொண்ட முக்கிய பணிகளை பாராட்டி ஜனாதிபதி விருதுகள் வழங்கப்பட்டன.

தொழில் திறன்கள், தொழிநுட்ப அறிவு, ஒழுக்க பண்பாடு, அர்ப்பணிப்பு ஆகிய உயர்ந்த பண்புகளுடன் உலகின் முன்னணி விமானப் படைகளுக்கு நிகராக செயற்படும் இயலுமையும் தொழிநுட்ப திறன்களும் எமது விமானப் படையினரிடம் உள்ளதென்றும் ஜனாதிபதி  மேலும் தெரிவித்தார். நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த மற்றும் அங்கவீனமுற்ற படையினருக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி தனது நன்றியை தெரிவித்தார்.

 

 

 

Related posts

கடுவலை – பியகமவை பாலத்தின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

நுவரேலியாவில் பயிற்சி பெற்ற மௌலவிமார்கள் இருவர் TID இனால் கைது

சிவப்பு அறிவித்திலை விடுத்துள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்