(UTV | கொழும்பு) – நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, தனது அமைச்சுப் பதவியை இன்று (04) இராஜினாமா செய்யவுள்ளார் என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.
இன்று (04) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திவிட்டு, அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யவுள்ளார் என்றும் அந்தத் தகவல்கள் தெரிவித்தன.
முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகிய இருவரையும் அமைச்சு பதவியிலிருந்து நீக்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இவரும் இராஜினாமா செய்யவுள்ளார் என்று அந்த தகவல்கள் தெரிவித்தன.