(UTV | கொழும்பு) – இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்கவிற்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என அவரது ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
முன்னர், பாராளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, ரவூப் ஹக்கீம் மற்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரானா தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து குறைந்தது 31 உறுப்பினர்கள் தனிமைப்படுத்தலிற்கு உட்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.