சூடான செய்திகள் 1

விபத்தில் பாதசாரி பலி

(UTV|COLOMBO)-பயாகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏதகம பகுதியில் இடம்பெற்ற விபத்து பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வாத்துவ பகுதியை நோக்கி பயணித்த வேன் ஒன்று பாதை ஓரமாக நடந்து சென்ற ஒருவரை மோதியதிலேயே விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் பலத்த காயமடைந்த நபர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (05) இரவு 7.15 மணியவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மதுகம, எலேதுல வத்த பகுதியை சேர்ந்த 51 வயதுடைய வேலு சொய்ஸா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் வேனின் ஓட்டுனரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 

 

 

 

 

Related posts

ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

முஜீபுர் ரஹ்மானின் பெயர் வர்த்தமானியில் வெளியீடு!

ரயில் சேவை அத்தியாவசிய தேவையாக நீடித்து வர்த்தமானி வெளியீடு