மினுவங்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்பிடமுல்ல பிரதேசத்தில் மினுவங்கொடயில் இருந்து வெயங்கொட நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியிலிருந்து விலகி விபத்துக்குள்ளானது.
விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதியும், பின் இருக்கையில் அமர்ந்திருந்தவரும் சிகிச்சைக்காக மினுவங்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 30 வயதுடைய திவுலப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் மினுவங்கொட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
பின் இருக்கையில் பயணித்த நபர் மேலதிக சிகிச்சைக்காக கம்பஹா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மினுவங்கொட பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.