வகைப்படுத்தப்படாத

வித்தியாவிற்கான நீதி விசாரணை! ஏமாற்றாதே

(UDHAYAM, COLOMBO) – வித்தியாவிற்கான நீதி விசாரணையை கொழும்புக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வித்தியாவிற்கான நீதி விசாரணை யாழ் மேல் நீதிமன்றில் வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

ஏமாற்றாதே மாணவியின் நீதியை கொழும்புக்கு மாற்றி எனும் வாசகங்களை தாங்கி, புங்குடுதீவு மகாவித்தியாலயத்திற்கு முன்னால் புங்குடுதீவு பொது அமைப்புகளின் ஒன்றியத்தினால் இந்த அடையாள உண்ணாவிரதப்போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த போராட்டம் மாலை 5 மணிவரை இடம்பெறவுள்ளது.

புங்குடு தீவு மகாவித்தியாலத்திற்கு முன்றலில் நடைபெறும் இந்த அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் பொது மக்கள் மததலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

Related posts

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு

காணாமல் போனோரின் உறவினர்களது போராட்டம் 100 வது நாளை எட்டியது

அரசு வெளியிட்டுள்ள கொள்கை தீர்மானத்தில் நம்பிக்கை இல்லை – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்