விளையாட்டு

விதுஷா லக்ஷானியின் பதக்கத்தை பலியானவர்களுக்கு அர்ப்பணிப்பதாக அறிவிப்பு

(UTV|COLOMBO) ஆசிய மெய்வாண்மை சம்பியன்ஷிப் சுற்றுத்தொடரில் தாம் பெற்ற வெண்கலப் பதக்கத்தை ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் பலியானவர்களுக்கு அர்ப்பணிப்பதாக இலங்கை வீராங்கனை விதுஷா லக்ஷானி அறிவித்துள்ளார்..

டோஹா கட்டாரில் நடைபெறும் ஆசிய மெய்வாண்மை சம்பியன்ஷிப் சுற்றுத் தொடரில் இந்த வீராங்கனை முப்பாய்ச்சல் போட்டியில் பங்கேற்று, இலங்கைக்கு வெண்கலப் பதக்கத்தை பெற்றுக் கொடுத்தார்.
மேலும் இவர் நீர்கொழும்பை சேர்ந்தவர். கட்டுவாபிட்டிய தேவாலயத்தின் மீதான தற்கொலைத் தாக்குதலில் நெருங்கிய நண்பர்களை இழந்ததாக விதுஷா லக்ஷானி குறிப்பிட்டார்.
ஆசிய மெய்வாண்மை சம்பியன்ஷிப் சுற்றுத்தொடர் நேற்று நிறைவு பெற்றது. இதில் இலங்கைக்கு பதக்கம் வென்று கொடுத்த ஒரே வீராங்கனை என்ற பெருமை லக்ஷானியையே சாரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

QATAR FIFA2022 கால்பந்து சாம்பியன் அணிக்கு பரிசுத்தொகை எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னையை வீழத்திய ஐதரபாத்…

இந்திய அணி வெற்றி