கேளிக்கை

விதியின் கொடூரமான முடிவு : புனித் மறைவுக்கு மோடி இரங்கல்

(UTV | பெங்களூர்) – விதியின் கொடூரமான முடிவு இது என்று புனித் ராஜ்குமார் மறைவு தொடர்பாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான புனித் ராஜ்குமார் இன்று (அக்டோபர் 29) காலமானார். உடற்பயிற்சியின்போது ஏற்பட்ட மாரடைப்பால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குச் சிகிச்சைப் பலனின்றி அவருடைய உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 46.

புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு இந்தியத் திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“விதியின் கொடூரமான முடிவு, திறமையான நடிகர் புனித் ராஜ்குமாரை நம்மிடமிருந்து பிரித்துச் சென்றுவிட்டது. இது இறப்பதற்கான வயதே அல்ல. அவரது பணியை, அற்புதமான ஆளுமை வரும் தலைமுறைகள் அன்போடு நினைவுகூர்வார்கள். அவரது குடும்பத்துக்கும் ரசிகர்களுக்கும் அனுதாபங்கள். ஓம் சாந்தி” எனத் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

  

Related posts

உலகளவில் இடம் பெற்ற பிரபலங்களின் திருமணங்கள்…

இலங்கையின் Mrs Sri Lanka for Mrs World தெரிவுக்கு Uschi Perera [PHOTOS]

போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிராஜா, சீமான், அமீர், கருணாஸ், கௌதமன் கைது