சூடான செய்திகள் 1

விடைத்தாள் திருத்தும் பணி – 27 பாடசாலைகளுக்கு பூட்டு

(UTVNEWS|COLOMBO) – கா.பொ.த உயர்தர பரீட்சையின் இரண்டாம் கட்ட விடைத்தாள் திருத்தும் பணிகளுக்காக எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 2 ஆம் திகதி வரை 4 பாடசாலைகள் மூடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு ஆனந்த வித்தியாலயம், கண்டி வித்யார்த்த வித்தியாலயம், மாத்தறை மஹானாம மகா வித்தியாலயம் மற்றும் குருநாகல் லக்தாஸ் டி மெல் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளே இவ்வாறு மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி வரை மேலும் 23 பாடசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் இல்லை…

பெரும் பதற்றத்துக்கு மத்தியில் மஸ்கெலியா பிரதேசசபை இ.தொ.கா வசம்

அலுகோசு பதவிக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வது இன்றுடன் நிறைவு