உள்நாடு

விடுமுறையில் சென்ற கடற்படை வீரர்களுக்கு கொரோனா

(UTV | கொவிட் -19) – இரத்தினபுரி, குருநாகல், பதுளை, கண்டி ஆகிய பகுதிகளுக்கு விடுமுறையில் சென்ற கடற்படை வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று மாலை வரையான காலப்பகுதியில் 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதில் 30 பேர் வெலிசறை முகாம் கடற்படையினர், 5 கடற்படையினர் விடுமுறையில் சென்ற இரத்தினபுரி, குருநாகல், கண்டி,பதுளையை சேர்ந்தவர்கள்,11 பேர் கொழும்பு-12 மாவத்தையைச் சேர்ந்தவர்கள் மற்றும் மருதானையைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர இன்று (24) 8.00 மணியளவில் மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்றையதினம் (24) இது வரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 48 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, 04 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related posts

நேற்றைய கொரோனா தொற்றாளர் விவரம்

சவேந்திர சில்வா தமக்கு எதிராக வழக்கு தொடரும் வரையில் காத்திருக்கின்றேன் – விமல்

தடயவியல் அறிக்கை – பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்க தீர்மானம்