கேளிக்கை

விஜய் படத்திற்காக மெனக்கிடும் ஏ.ஆர்.ரஹ்மான்

(UTV|INDIA) அட்லி இயக்கத்தில் விஜய் – நயன்தாரா நடிப்பில் உருவாகும் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. மெர்சல் படத்தை தொடர்ந்து அட்லி – விஜய் கூட்டணியில் உருவாகும் இந்த படத்திற்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இதுகுறித்து பேட்டி ஒன்றில் ஏ.ஆர்.ரஹ்மான் பேசும்போது,
இந்த மாதிரியான ஒரு கதைக்கு ஹாலிவுட்டில் நான் இசையமைத்திருக்கிறேன். தென்னிந்திய சினிமாவில் இது தான் முதல்முறை. இயக்குநர் அட்லி, பேலே, லெகான் உள்ளிட்ட படங்களின் ரசிகர். அவரது இசை உணர்வு சிறப்பானது. நான் இசையமைத்த அனைத்து ஆல்பத்தையும் கேட்டிருக்கிறார். அதில் இருந்து இந்த மாதிரி பண்ணுங்களேன் சார், என்று கேட்பார். இது போல் கேட்கும் இயக்குநர்களை எனக்கு பிடிக்கும்.
இவ்வாறு இசையுடன் ஒன்றிணைந்து, ரசித்து செய்யும் போது திரையில் அது சிறப்பாக வந்திருப்பதை உணர முடியும். ஏதோ பாட்டு வாங்கிவிட்டோம் என்று அடுத்த கட்டத்திற்கு செல்லாமல், ஒவ்வொன்றையும் ரசித்து ரசித்து செய்வார் அட்லி.
இவ்வாறு கூறியிருக்கிறார்.

Related posts

படபிடிப்பில் படுகாயம் அடைந்த தன்ஷிகா

காதலில் ஏமாந்த சார்மி

லொஸ்லியா தந்தை மரணம் : இலங்கைக்கு உடலை கொண்டு வர நடவடிக்கை