உள்நாடு

விஜயதாஸ ராஜபக்ஷ கப்பம் பெற்றமைக்கு சாட்சி உண்டு

 (UTV | கொழும்பு) – சர்ச்சைக்குரிய எவன்கார்ட் நிறுவனத்திடமிருந்து 20 மில்லியன் ரூபாயைப் தான் பெற்று கொண்டதாக, விஜயதாஸ ராஜபக்‌ஷ முன்வைக்கும் குற்றச்சாட்டை, நிரூபிக்குமாறு, ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் ராஜித சேனாரத்ன சவால் விடுத்துள்ளார்.

தனியார் பத்திரிகை ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

விஜயதாஸ ராஜபக்‌ஷவே எவன்கார்ட் நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றுள்ளதாகவும் இது தொடர்பில் எதிர்வரும் நாட்களில் நிரூபிப்பதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

சுகாதாரத்துறையில் உயரிய பணியாற்றிய தனக்கு எவன்கார்ட் நிறுவனத்தின் பணம் தேவையில்லை என்றும், விஜயதாஸ பணம் பெற்றமைத் தொடர்பான புகைப்படமும் தன்னிடம் உள்ளதாகத் தெரிவித்துள்ள ராஜித சேனாரத்ன, அன்று விஜயதாஸ ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு வராமல், நிஷங்க சேனாதிபதியின் வீட்டில் பகல் உணவுக்குச் சென்றிருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சிங்களத்தில் இருந்து மொழிபெயர்ப்பு : ஆர்.ரிஷ்மா 

Related posts

டிக்கோயாவில் சுமார் 800 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

இடைக்கால அரசிலும் மஹிந்தவே பிரதமர் : PAFFREL கண்டனம்

மேலும் 10 பேர் பூரணமாக குணம்