உள்நாடு

விஜயதாச விவகாரம், அதிருப்தியில் பஷில்..!!

சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டுள்ள விஜயதாச ராஜபக்‌ச (Wijeyadasa Rajapakshe) தொடர்பில் பசில் ராஜபக்‌ச (Basil Rajapaksa)கடும் அதிருப்தியுடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின் ​போது ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில்(Sri Lanka Podujana Peramuna) போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர், விஜயதாச ராஜபக்‌சவுக்கு கோட்டாபய அரசில் எதுவித முக்கியத்துவமும் வழங்கப்படவில்லை.

எனினும் கடந்த 2022 ஆம் ஆண்டின் மே 09ஆம் திகதி ரணில் விக்ரமசிங்க, பிரதமராகப் பதவியேற்றுக் கொண்ட பின்னர் விஜயதாச ராஜபக்‌ச, நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் அண்மைக்காலமாக ஜனாதிபதி பதவி கனவில் இருக்கும் அவர், பொதுஜன பெரமுன, ஜே.வி.பி. மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சிகளின் ஊடாக அதற்கான களம் தனக்கு கிடைக்காது என்று தெளிவாகத் தெரிந்த நிலையில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டு, அதன் ஊடாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முயற்சிப்பதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் கடந்த 23ஆம் திகதி மாலை ஜனாதிபதி ரணில் மற்றும் பொதுஜன பெரமுனவின் நிறுவனர் பசில் ராஜபக்‌ச ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின் ​போது விஜயதாச ராஜபக்‌ச தொடர்பில் பசில் கடும் கோபத்துடன் வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார்.

கட்சி தாவல் சட்டத்தின் கீழ் பொதுஜன பெரமுன கட்சி, விஜயதாச ராஜபக்‌சவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும், அவற்றுக்கு எதிராக ஜனாதிபதி ரணில் செயற்படக்கூடாது என்றும் பசில் ராஜபக்‌ச அதன்போது வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related posts

மூவரை பலி கொண்ட அதே இடத்தில் விபத்துக்குள்ளாகி 150 அடி பள்ளத்தில் வீழ்ந்த டிப்பர்

editor

சுகயீன விடுமுறை போராட்டத்துக்கு தயாராகும் அரச ஊழியர்கள்

மீன்சந்தைகளை மூடுவது அநாவசியமாகும்