உள்நாடு

விஜயதாசவை நியமிப்பதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை நியமிப்பதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், கட்சியின் பொதுச் செயலாளராக துஷ்மந்த மித்ரபால செயல்படுவதைத் தடுத்து மற்றுமொரு தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்காலிக தலைமைச் செயலர் எடுத்த முடிவுகளை அமல்படுத்த தடை விதித்து நீதிமன்றம் மற்றொரு தடை உத்தரவையும் பிறப்பித்துள்ளது.

மஹிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன மற்றும் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் சமர்ப்பித்த முறைப்பாட்டுக்கு அமைய கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்த தடை உத்தரவு வரும் மே 8 ஆம் திகதி வரை அமலில் இருக்கும் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

கவிஞர் அஹ்னாப் ஜசீம் பிணையில் விடுதலை

பாராளுமன்றம் கூடியது

தண்ணீர் போத்தல் விலைகளும் அதிகரிப்பு