சூடான செய்திகள் 1

UPDATE- முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரனுக்கு பிணை

(UTV|COLOMBO)-கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் பிணை செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.


வாக்குமூலம் வழங்க சென்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற செயலக விசாரணை பிரிவால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் வீரசிங்க மண்டபத்தில் இடம்பெற்ற அரச நிகழ்வொன்றின் போது வடக்கின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டுமாயின் தமிழீழ விடுதலைப்புலிகளின் கை மேலோங்க வேண்டும் எனவும், அவ்வாறு மேலோங்கினாலேயே சிறுவர்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் எனவும் பகிரங்கமாக கூறினார்.

விஜயகலா மகேஸ்வரனின் இந்த கூற்றானது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக காணப்படுவதாக தெரிவித்து அவருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கூற்றின் பின்னர் எழுந்த சர்ச்சையால் அவர் தமது இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து விலகியமை குறிப்பிடத்தக்கது.


முன்னாள் இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஷ்வரன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

சஜித் பிரேமதாச – ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த மற்றும் அவரது சகோதாரர் விளக்கமறியல் காலம் நீடிப்பு

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாளைய தினம் கட்சித் தலைவர்கள் கூட்டம்…