உள்நாடு

விசேட ரயில் சேவை தொடர்பில் வெளியான அறிவிப்பு

தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் மீண்டும் கொழும்பு திரும்புவதற்காக விசேட ரயில் சேவை ஒன்றை செயல்படுத்தியுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த விசேட ரயில் திட்டம் வரவிருக்கும் ஏப்ரல் 19 மற்றும் 20 ஆகிய இரு நாட்களுக்கு செயல்படுத்தப்படவுள்ளதாக திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இந்த விசேட ரயில் அட்டவணையின் கீழ் இயக்கப்படும் சேவைகள் மூலம், சொந்த ஊர்களுக்கு சென்ற மக்களுக்கு மீண்டும் கொழும்பு கோட்டைக்கு திரும்புவதற்கு வசதி ஏற்படுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, காலியில் இருந்து கொழும்பு கோட்டைக்கு வருவதற்காகவும், பெலியத்தையில் இருந்து கொழும்பு கோட்டைக்கு வருவதற்காகவும் தலா இரண்டு விசேட ரயில் சேவைகளை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பதுளையில் இருந்து கொழும்பு கோட்டைக்கு வருவதற்காக இரண்டு ரயில் சேவைகளை இயக்கவும் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதன் மூலம் பொது மக்களுக்கு மீண்டும் கொழும்பு கோட்டைக்கு பயணிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மேலும் 745 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

நிலக்கரி கொள்வனவில் சிக்கல்

“ சகோதரத்துவத்தை தொடர்ந்தும் சேதப்படுத்த ஒரு சிறிய இனவாதக் குழுவுக்கும் நாம் இடமளித்தல் கூடாது” பெருநாள் வாழ்த்துச் செய்தியில் சஜித்