சூடான செய்திகள் 1

விசேட மேல் நீதிமன்றத்தின் முதலாவது வழக்கு நாளை…

(UTV|COLOMBO)-விசேட மேல் நீதிமன்றத்தின் முதலாவது வழக்கை விசாரிப்பதற்கான அமர்வு நாளை (24) நடைபெறவுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வழக்கு விசாரணை தாமதமடைவதைத் தடுக்கும் வகையில் இந்த விசேட மேல் நீதிமன்றம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அலுவலக தலைமை அதிகாரியாக செயற்பட்ட காமினி செனரத் உள்ளிட்ட 4 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல்செய்யப்பட்டுள்ள வழக்கு, விசேட மேல் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய தெரிவித்தார்.

லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 500 மில்லியன் ரூபா நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை உள்ளிட்ட 24 குற்றச்சாட்டுக்களின் கீழ் இவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விசேட மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாத்தில், மேல்நீதிமன்ற நீதிபதிகளான சம்பத் அபேகோன், சம்பத் விஜேரத்ன, ஆகியோரும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகியோரும் அடங்குகின்றனர்.

அரசநிதியை முறைகேடாக பயன்படுத்தியமை மற்றும் இலஞ்ச ஊழல் முறைகேடுகள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஸ்தாபிக்கப்பட்ட விசேட மேல்நீதிமன்றம் நேற்று முன்தினம் (21) திறந்துவைக்கப்பட்டது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணையுமாறு அழைப்பு

மூன்று நபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது

இன்று முதல் விசேட தொடரூந்துச் சேவைகள்