உள்நாடு

விசேட சுற்றிவளைப்பில் 3,009 பேர் கைது

(UTV | கொழும்பு) –  பொலிஸாரால் நேற்று முன்தினம் இரவு முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 3,009 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுள் சந்தேகத்தின்பேரில் 431 பேரும், பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த 645 பேரும் உள்ளடங்குவதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

சுமார் 14,927 பொலிஸார் பங்கேற்ற இந்த சுற்றிவளைப்புகளில், குற்றச் செயல்கள் தொடர்பில் தேடப்படும் 98 பேரும், மதுபானம் மற்றும் போதைப்பொருள் தொடர்ல் 1,250 பேரும், துப்பாக்கியை தம்வசம் வைத்திருந்தமை தொடர்பில் 5 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அதேநேரம், மதுபோதையில் வாகனம் செலுத்திய 580 சாரதிகளும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

நாட்டிற்கு அச்சுறுத்தலான உடன்படிக்கைகளை இரத்து செய்யுமாறு கோரிக்கை [VIDEO]

அவசரமாக கூடும் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு!

சிவனொளிபாத மலைக்கு செல்வோருக்கான அறிவித்தல்