சூடான செய்திகள் 1

விசேட குழுவின் அறிக்கைகள் நாளை(11)

(UTV|COLOMBO)-புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வழிநடத்தல் குழுவிற்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழுவின் சில அறிக்கைகள் நாளைய தினம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளன.
அரசியலமைப்பு பேரவையின் வழிநடத்தல் குழுவின் கூட்டம் நேற்று இடம்பெற்றது.
இதன்போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய குறித்த அறிக்கை நாளைய தினம் முன்வைக்கப்பட உள்ளது.
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து பல்வேறு தரப்பினர் முன்வைத்துள்ள சில அறிக்கைகள் நாளைய தினம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற  பிரதி செயலாளர் நாயகம் நீல் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு உருவாக்க சபையின் வழிநடத்தல் குழுவின் தலைவராக செயற்படும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால், இந்த அறிக்கைகள் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளன.
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து ஒவ்வொரு அரசியல் கட்சியினது சார்பிலும் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் இந்த அறிக்கைகளில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேநேரம், புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்த அரசியலமைப்பு சபை, நாளைய தினம் கூடவுள்ளது.

Related posts

கந்தானை காவல் நிலையத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான பொதி !

ஹரினின் தந்தை காலமானார்

கைது செய்யப்பட்ட சுதந்திர கட்சி அமைப்பாளர் விளக்கமறியலில்