சூடான செய்திகள் 1

விசா இல்லாமல் தங்கியிருந்த 13 வெளிநாட்டவர்கள் கைது

(UTV|COLOMBO) நாட்டின் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் விசா இல்லாமல் நாட்டில் தங்கியிருந்த 13 வௌிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவற்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்ட வௌிநாட்டவர்களில் பெண்ணொருவரும் அடங்குவதாக காவற்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி , கல்கிஸ்ஸ – வடரப்பல பிரதேசத்தில் 6 பேரும் மற்றும் வெலிகட பிரதேசத்தில் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் , அவர்கள் அனைவரும் நைஜீரியா பிரஜைகள் எனவும் நவகமுவ பகுதியில் ஈரான் நாட்டவரும் , ரத்மலானை பகுதியில் இந்திய நாட்டவர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் தெஹிவளை – நெதிமால பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட தாய்லாந்து நாட்டை சேர்ந்த பெண் 38 வயதுடையவர் என காவற்துறையினர் குறிப்பிட்டனர்.

 

 

 

 

Related posts

மூன்று ஆண் பிள்ளைகளின் தாய் கொடூரமாக வெட்டிக்கொலை

சதொச ஊடாக மத்திய கிழக்கிலிருந்து பேரீச்சம்பழ இறக்குமதி

மஸ்கின் ஸ்டார் லிங்க் செயற்கை கோள் இணைய சேவைக்கு இலங்கையில் அனுமதி!