சூடான செய்திகள் 1

விசாரணைக்கு வருகிறது வைத்தியர் ஷாபிக்கு எதிரான வழக்கு!

(UTVNEWS | COLOMBO) – வைத்தியர் சோகு சியாப்தீன் மொஹமட் ஷாபிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

குறித்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

அசாதாரண முறையில் சொத்து சேகரிப்பு குற்றச்சாட்டு தொடர்பில் வைத்தியருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு கடந்த 11 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, மக்கள் கிளர்ச்சிகளை ஏற்படுத்துவார்கள் என்பதினால் வைத்தியரை இன்று வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

Related posts

எம்.ஆர். லதீப், இலங்கக்கோன் உள்ளிட்ட மூவருக்கு தெரிவுக் குழு அழைப்பு

கொச்சிக்கடையில் வெடிப்புச் சம்பவம்

ஃபிலிப்பின்ஸ் ஜனாதிபதியை சந்திக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன