உள்நாடு

விகாரையின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்க ஆளுநர் மறுப்பு

(UTV | கொழும்பு) –  திருகோணமலை- நிலாவெளி, பெரியகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருந்த விகாரைக்கான எந்த ஒரு கட்டுமானப்பணிகளும் பிரதேச சபையின் அனுமதியின்றி முன்னெடுக்க முடியாது என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இதன்படி குறித்த விகாரையின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்க அனுமதி வழங்குமாறு கோரி மாவட்ட செயலகத்திற்கு முன்பாக பிக்குகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் விகாரை நிர்மாணிப்பதால் காணப்படும் பிரச்சினை குறித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பிக்குகளுக்கு அரச அதிபர் அலுவலகத்தில் வைத்து ஆளுநரால் விளக்கம் அளிக்கப்பட்டு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து பிரதேச செயலகத்தில், திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இடம்பெற்றுக் கொண்டிருந்த நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்களால் இக்கூட்டம் இடைநிறுத்தப்பட்டது.

இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண ஆளுநர் , திருக்கோணமலை அனைத்து இன மக்களும் வாழும் ஒரு சமூகமாகும். பிக்குகளின் செயற்பாடுகள் போல் ஏனைய இனத்தவரும் இவ்வாறானதொரு செயற்பாடுகளை முன்னெடுப்பார்களானால் அதற்கு நீங்களே ஒரு முன்னுதாரணமாக செயற்படுவீர்கள் என தெரிவித்தார்.

மேலும் பிரதேச செயலாளரால் வழங்கப்பட்ட கடிதத்தை மீளப்பெற்றாலும், பிரதேச சபையின் அனுமதியின்றி எந்த ஒரு கட்டுமானப்பணிகளும் முன்னெடுக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களால் தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை – பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர

editor

மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக அடக்குமுறைகளைப் பிரயோகிக்க வர வேண்டாம் – சஜித் பிரேமதாச

editor

குளியாப்பிட்டிய கட்சி கூட்டம்: UNP நவீன் அதிருப்தி